'காவல்துறை உங்கள் நண்பன்' திரைவிமர்சனம்

'காவல்துறை உங்கள் நண்பன்' திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் கமெர்ஷியல் கதைக்களம் கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், மக்களின் ரசனைக்கேட்ப அவ்வப்போது நடிப்புக்கும், கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சில படங்களும் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகியுள்ள, காவல்துறை உங்கள் நண்பன் படம் எப்படியுள்ளது என்று இங்கு பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி ரவினா ரவி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்டு இருவரும், தங்களது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு நாள் இரவில், தனியாக ரவினா நடந்து வரும் போது, மூன்று இளைஞர்கள் வழிப்பறி செய்து ஒருவர் ரவினாவை கட்டிப்பிடித்து விட்டு செல்கிறார். இதனால் கவலைப்படும் ரவினா, நடந்ததை சுரேஷிடம் கூற, இருவரும் மூன்று இளைஞர்களை தேடி செல்கிறார்கள்.

அப்போது இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள், சுரேஷ், ரவினாவை மறித்து விசாரிக்கிறார்கள். இதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் மைம் கோபிக்கும் சுரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

போலீசை எதிர்த்து சுரேஷ் பேசுவதால் கடுப்பான மைம் கோபி, சுரேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் பல சித்திரவதைகளை அனுபவிக்கும் நாயகன் சுரேஷ், இந்த பிரச்சனையில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

படத்தில் கதாநாயகன் சுரேஷ் ரவி போலீஸிடம் அடி வாங்கும் காட்சிகள் நம் கண்களை கலங்க செய்கிறது. படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை தனது நடிப்பை எதார்த்தமாக காட்டியுள்ளார் சுரேஷ் ரவி.

கதாநாயகி ரவினாவின் நடிப்பு மிடில் கிளாஸ் பெண்களை கண்முன் கொண்டு வருகிறது. மேலும் சுரேஷ் மற்றும் ரவினாவின் காதல் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியுள்ளது. படத்தில் அவர் கண்கலங்கும் காட்சிகள் நம்மை பரிதாபப்பட வைக்கிறது.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் மைம் கோபியின் வில்லத்தமான நடிப்பு பார்ப்போரை மிரட்டி இருக்கிறது. மைம் கோபியின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

போலீஸ் அதிகாரியை ஒரு சாதாரண மனிதன் எதிர்த்து பேசினால், என்னென்ன விபரீதம் நடக்கும் என்பதை எதார்த்தமாக எடுத்து காட்டியுள்ளார் இயக்குனர் ஆர்.டி.எம்.

படத்தில் தோன்றிய ஒவ்வொரு கதாபாத்திரங்கள் தனக்கான வேலைகளை கச்சிதமாக செய்துள்ளனர்.

அனைத்து போலீசும் கெட்டவர்கள் இல்லை, நல்ல மனசாட்சி உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார்.

க்ளாப்ஸ்

படத்தின் வசனங்கள்

விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு படத்திற்கு

வடிவேல் மற்றும் விமலராஜின் எடிட்டிங்

சுரேஷ், ரவினா, மைம் கோபி நடிப்பு

ஆர்.டி.எம் இயக்கம்

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி கொஞ்சம் நீளமாக இருக்கிறது

மொத்தத்தில் 'காவல்துறை உங்கள் நண்பன்' பாராட்டுக்குரிய சிறந்த திரைப்படம்

LATEST News

Trending News

HOT GALLERIES