குக்வித் கோமாளி 2 பிரபலங்களுக்கு இவ்வளவு சம்பளமா?

குக்வித் கோமாளி 2 பிரபலங்களுக்கு இவ்வளவு சம்பளமா?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தூக்கி வாரிப்போட்ட நிகழ்ச்சி என்றால் அது பிரபல தொலைக்காட்சியின் குக்வித் கோமாளி தான். சூப்பர் சிங்கர், கேபிஒய், பிக்பாஸ் நிகழ்ச்சிகளுக்கு டிஆர்பியில் டஃப் கொடுத்துள்ளது இந்நிகழ்ச்சி.

அதிலும் சமையலை மையமாக வைத்து அவர்கள் செய்யும் காமெடிகள் தான் தற்போது இணையத்தில் எல்லோரின் காட்சிகளாக அமைந்து வருகிறது. அப்படியாக இந்நிகழ்ச்சி சமீபத்தில் இரண்டாம் சீசன் நிறைவடைந்தது. கனி சீசன் 2வின் வின்னராக வெற்றிப்பெற்றதை அடுத்து போட்டியாளர்களுக்கும் கோமாளிகளுக்கும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.

அதில் கோமாளி புகழ், பாலா, சிவாங்கி, பவித்ரா, ஷகிலா உள்ளிட்ட பலர் சினிமாவில் வாய்ப்புகள் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் குக்வித் கோமாளி 2 சீசனில் வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது. தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா லட்சுமி ஒரு எபிசோட்டிற்கு ரூ. 10 ஆயிரம் சம்பளமாக பெற்று வந்துள்ளனர்.

கோமாளி புகழ் மற்றும் பாலாவிற்கு ஒரு எபிசோட்டிற்காக 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இருவரில் பெரிய இடத்தினை பெற்று பல பரிசுகளையும் புகழையும் பெற்று வருகிறார் புகழ். விஜே மணிமேகலை இந்நிகழ்ச்சியில் ரூ 20 ஆயிரம் சம்பளமாக ஒரு எபிசோட்டிற்கு வாங்கியுள்ளார். இதையடுத்து சிங்கர் சிவாங்கி மற்றும் நடிகர் அஸ்வினுக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளனர் ஒரு எபிசோட்டிற்காக.

அதேபோல், மதுரை முத்து, பாபா பாஸ்கர் தலா ரூ 40 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளனர். அம்மா என்று நிகழ்ச்சியில் கூறப்பட்ட நடிகை ஷகிலாவிற்கு ரூ. 50 ஆயிரம் ஒரு எபிசோட்டிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஷகிலாவின் கேரியர் பெயர் மாறியுள்ளது என்று கூறியும் வருகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES