சமந்தாவின் இந்த கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி பவித்ரா - ஆசைப்படும் பிரபலம்

சமந்தாவின் இந்த கதாபாத்திரத்தில் குக் வித் கோமாளி பவித்ரா - ஆசைப்படும் பிரபலம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் இளம் நடிகை பவித்ரா.

இவர் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெடி ஸ்டெடி போ மற்றும் ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

அதே போல் மலையாளத்தில் வெளியான உல்லாசம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடிகை பவித்ரா நடித்துள்ளார்.

மேலும் தற்போது சதீஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் கதாநாயகியாக பவித்ரா கமிட்டாகி இருக்கிறார். பவித்ராவுக்கு கொஞ்சம் நடிகை சமந்தாவின் முக ஜாடை இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் சமந்தாவை போலவே இருக்கும் புகைப்படத்தை கூட பவித்ரா வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சமந்தா நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்தில், சமந்தாவின் கதாபாத்திரத்தில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன், என்று கூறியுள்ளார்.

சமந்தாவின் பாராட்டால், 'குக் வித் கோமாளி 2' புகழ் பவித்ரா நெகிழ்ச்சி!! -  Pagetamil

LATEST News

Trending News

HOT GALLERIES