நடிகர் விஜய்யின் பிளாப் படங்கள் கூட யூடியூப்பில் படைக்கும் சாதனைகள், எந்தெந்த படங்கள் தெரியுமா?

நடிகர் விஜய்யின் பிளாப் படங்கள் கூட யூடியூப்பில் படைக்கும் சாதனைகள், எந்தெந்த படங்கள் தெரியுமா?

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்களும் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம், மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது.

மேலும் தற்போது தளபதி 65 படம் குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. அதற்காக பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் அமைக்கும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது.

 இந்நிலையில் தளபதி விஜயின் பிளாப் படங்களாக கருதப்படும் சுறா மற்றும் வசீகரா திரைப்படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களையும் தற்போது வரை 40 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

LATEST News

Trending News