ஆல் தோட்ட பூபதி பாடலில் சிம்ரனுக்கு பதில் முதலில் இந்த நடிகை தான் நடனம் ஆட இருந்தாரா?
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலம்.
இவரது படங்களில் விஜய்யின் நடிப்பை அடுத்து ரசிகர்கள் ரசிப்பது அவரது நடனத்தை தான்.
தமிழ் மட்டும் இல்லாது மற்ற மொழி நடிகர்களுக்கும் விஜய்யின் நடனம் மிகவும் பிடிக்கும்.
அப்படி விஜய் நடனத்தில் வந்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்படுவது யூத் படத்தில் வந்த ஆல் தோட்ட பூபதி பாடல்.
இதில் விஜய்-சிம்ரன் இருவரின் நடனத்தில் பாடல் அமைய படு ஹிட்டானது.
தற்போது இப்பாடல் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது இப்பாடலில் சிம்ரனுக்கு பதில் முதலில் காயத்ரி ரகுராம் தான் நடனம் ஆட இருந்தாராம். இதோ காரணத்தால் அது நடக்கவில்லையாம்.