குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- நீங்க ரெடியா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி- நீங்க ரெடியா?

சமையல் நிகழ்ச்சியும் இந்த அளவிற்கு ஹிட்டாகும் என்றால் அது விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

இதுவரை எத்தனையோ சமையல் நிகழ்ச்சிகள் வந்துள்ளது, ஆனால் இதுபோல் மக்களிடம் பெரிய ரீச் பெற்ற எந்த நிகழ்ச்சியும் இல்லை.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் அண்மையில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாகவும் முடிந்துவிட்டது.

குக் வித் கோமாளி 2 இறுதி நிகழ்ச்சியில் சிம்பு கலந்துகொண்டு மேலும் ஹிட்டாக்கிவிட்டார்.

தற்போது இந்நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி. அது என்னவென்றால் வரும் ஞாயிற்றுக்கிழமை குக் வித் கோமாளி 2 சீசனின் இறுதி நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.

மே 2 காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

LATEST News

Trending News