போலியான விஷயத்தை நம்ப வேண்டாம் - ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இளம் நடிகை அதுல்யா ரவி

போலியான விஷயத்தை நம்ப வேண்டாம் - ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இளம் நடிகை அதுல்யா ரவி

காதல் கண் கட்டுதே, ஏமாளி, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து இளம் நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வளம் வருபவர் நடிகை அதுல்யா ரவி.

இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதுல்யா பெயரில் முகநூல் பக்கத்தில் போலிக்கணக்கு துவங்கப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதுகுறித்து தெரிய வந்த அதுல்யா, உடனே அந்தப் போலிக்கணக்கு குறித்து தன்னுடைய ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

“Facebookல் யாரோ ஒரு போலி கணக்கை உருவாக்கி, திரைப்படத்துறையில் எனக்கு தெரிந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அனுப்புவது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

" இது மிகவும் மோசமான விஷயம். ஏற்கனவே அது குறித்து புகாரளித்துள்ளேன். நான் அதிகாரப்பூர்வமாக பேஸ்புக்கில் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். தயவு செய்து இந்த கணக்கை ரிப்போர்ட் செய்யுங்கள் ” என்று தெரிவித்துள்ளார். 

LATEST News

Trending News