தனது மகள் மிலாவுக்கு சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த ஷகீலா- எதற்காக தெரியுமா?
குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. முதல் சீசன் போட்டியாளர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை.
ஆனால் இரண்டாவது சீசன் போட்டியாளர்களுக்கு குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
அனைவரும் நிகழ்ச்சி முடிவதற்குள்ளேயே படங்கள் எல்லாம் கமிட்டாகி நடித்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஷகீலா மீது மக்களுக்கு இருந்த பார்வையும் மாறியுள்ளது, அனைவரும் அவரை அம்மா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போது ஷகீலா தனது மகள் மிலாவிற்கு ஒரு சர்ப்ரைஸ் பரிசாக ஐ பார்ட் கொடுத்துள்ளார். காரணம் மிலாவின் இன்ஸ்டா பக்கத்தில் 100 K பாலோவர்கள் வந்துள்ளார்களாம்.