பிக் பாஸ் நடிகை ரைசாவிற்கு நடந்த மிகப்பெரிய கொடுமை - புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

பிக் பாஸ் நடிகை ரைசாவிற்கு நடந்த மிகப்பெரிய கொடுமை - புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

முன்னணி நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கி பிரபலமானவர் நடிகை ரைசா.

இதன்பின் தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாகவும், சோலோ ஹீரோயினாக நடித்து கலக்கி வருகிறார் இளம் நடிகை ரைசா.

இந்நிலையில் நடிகை ரைசா ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தனது முகத்தில் காயத்துடன் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.

இதில் " Facial Treatmentகாக சென்று இருந்தேன், அங்கே நான் வேண்டாம் என்று கூறியும், அவர் எனக்கு புதிதான விஷயத்தை என் முகத்தில் Facial செய்தார். அதன் விளைவு என் முகத்தில் மிகப்பெரிய காயம் ஏற்பட்டுள்ளது " என்று பதிவு செய்துள்ளார்.

மேலும் " அதன்பின் என்னால் அவரை பார்க்க முடியவில்லை. அவருடன் தொழிலாளர்களிடம் கேட்டாலும், அவர் ஊருக்கு வெளியில் இருக்கிறார் என்று கூறிவிட்டார் " என்று தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES