அஜித்துக்கு இன்று நடந்தது மிகவும் சோகமான விஷயம்- வருத்தப்பட்ட தொகுப்பாளினி டிடி
தமிழகத்தில் இன்று காலை முதல் மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
இதில் முக்கியமாக அரசியல் வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் நேரில் வந்து வாக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.
தன்னால் மற்றவர்களுக்கு எப்போதும் பிரச்சனை வந்துவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் அஜித்.
இன்று காலையே தனது மனைவியுடன் ஓட்டுபோட வந்தார். ஓட்டுபோட வந்த அவரை கண்டதும் ரசிகர்கள் வழக்கம் போல் நெருங்கி சென்று செல்பி எல்லாம் எடுத்துள்ளனர்.
அந்த நபர் ஒரு முகக் கவசம் கூட அணியவில்லை, எனவே கோபமான அஜித் அவரது செல்போனை கோபமாக பறித்தார்.
பின் அந்த ரசிகருக்கு அறிவுரை கூறி போனை திருப்பி கொடுத்துள்ளார்.
இன்று காலை அஜித் அவர்களுக்கு நடந்தது சோகமளிக்கிறது. ரசிகர்கள் சந்தோஷமாக இருக்க அவர் நிறைய கொடுத்துள்ளார், நாம் அதற்கு பதிலாக அவரை நிம்மதியாக ஓட்டு போட விட வேண்டாமா?.
ஆனால் அஜித் சார் நீங்கள் மிகவும் அமைதியாக இருந்தீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்.