பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வெடிக்கப்போகும் சொத்து பிரச்சனை... சக்திவேல் போட்ட திட்டம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வெடிக்கப்போகும் சொத்து பிரச்சனை... சக்திவேல் போட்ட திட்டம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த பிரச்சனை முடிந்தது என யோசிப்பதற்குள் பெரியதாக பிரச்சனை வெடித்துள்ளது.

செந்தில் தனது வேலையில் லஞ்சம் வாங்கிய விஷயம் தெரிந்து முதலில் மீனா செம ஷாக் ஆனார், பின் வீட்டிற்கு இந்த விஷயம் தெரியவர பாண்டியன் செம கோபப்பட்டார்.

அதோடு லஞ்சமாக வாங்கிய பணம் அனைத்தையும் வாங்கியவர்களிடம் கொடுத்துவிட்டு வர சொல்ல அது முடியாது என்ற செந்தில், பின் கஷ்டப்படுபவர்களுக்கு அந்த பணத்தை செலவு செய்தார்.

ஆனால் இப்போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஒருவர் செந்தில் பெயரை கூறியதால் தற்போது அவரது வேலைக்கு பிரச்சனை வந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வெடிக்கப்போகும் சொத்து பிரச்சனை... சக்திவேல் போட்ட திட்டம் | Pandian Stores 2 Serial August 12 Episode

எபிசோட்

பாண்டியன் வீட்டில் இப்படியொரு பிரச்சனை என்றால் முத்துவேல் வீட்டில் வேறொரு விஷயம் நடக்கிறது. அதாவது முத்துவேல் தங்களது சொத்தை பிடிக்க முடிவு எடுத்து யார் யாருக்கு என்ன என கூறுகிறார்.

அப்போது முத்துவேல் இந்த வீடு அம்மா இருக்கும் வரை அவரது பெயரில் தான் இருக்கும், அதன்பின் பழனிவேலுக்கு சொந்தமானது என்கிறார்.

அதைக்கேட்ட சக்திவேல், பழனி என்ன செய்தான் இந்த வீட்டிற்காக, அவனுக்கு எப்படி இந்த வீட்டை கொடுக்க முடியும். பல கோடி மதிப்புள்ள இந்த வீடு குமாருக்கு சொந்தமானது, அண்ணனிடம் இதுகுறித்து கேட்பேன் என்கிறார். முத்துவேல் வீட்டில் அடுத்து சொத்து பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அடுத்து வெடிக்கப்போகும் சொத்து பிரச்சனை... சக்திவேல் போட்ட திட்டம் | Pandian Stores 2 Serial August 12 Episode

LATEST News

Trending News

HOT GALLERIES