நீ வெர்ஜினா?.. ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் காதலிக்கு நடந்த காஸ்டிங் கவுச் விவகாரம்

நீ வெர்ஜினா?.. ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் காதலிக்கு நடந்த காஸ்டிங் கவுச் விவகாரம்

சென்னை: சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி வரும் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அவ்வப்போது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, வாய்ப்பு வழங்குவதாகக் கூறி நடிகைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறும் சம்பவங்கள் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகின்றனர். அந்த வரிசையில், தனக்கு நேர்ந்த காஸ்டிங் கவுச் அனுபவம் குறித்து பிரபல நடிகையும் ஹர்திக் பாண்டியாவின் முன்னாள் காதலியுமான எல்லி அவ்ராம் மனம் திறந்து பேசியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த நடிகையான எல்லி அவ்ராம், பாலிவுட் படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து பணியாற்றி வருகிறார். நடிப்புடன் தனது நடனத் திறமையாலும் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ள அவர், திரைத்துறையில் ஆரம்ப காலத்தில் வாய்ப்புகளைத் தேடியபோது எதிர்கொண்ட மோசமான அனுபவம் ஒன்றை தற்போது பகிர்ந்துள்ளார்.

அதிர்ச்சி கேள்வி: ஹாட்டர்ஃப்ளை ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய எல்லி அவ்ராம், திரைத்துறையில் செல்வாக்கு மிக்க ஒருவரை சந்தித்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

அந்த சந்திப்பின்போது தன்னிடம் மிகவும் தனிப்பட்ட முறையில், "நீ கன்னிப் பெண்ணா?" என்று அந்த நபர் கேட்டதாக எல்லி தெரிவித்துள்ளார். அதற்கு தான் இல்லை என்று பதிலளித்ததாகவும், ஆனால் அதன்பிறகு அவர் பேசிய விதம் தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகவும் கூறியுள்ளார்.

Hardik Pandya s Ex-Girlfriend Elli AvrRam Reveals Shocking Casting Couch Experience

தன்னிடம், "ஏற்கனவே ஒருவருடன் உறவில் இருந்திருந்தால், இன்னொருவருடன் இருப்பதில் என்ன பிரச்னை?" என்ற பொருளில் அந்த நபர் பேசியதாகவும் எல்லி குறிப்பிட்டுள்ளார். தொழில்முறை வாய்ப்பு தொடர்பான சந்திப்பில் இப்படியொரு கேள்வியை எதிர்பார்க்காததால், அந்த தருணம் தனக்கு மிகவும் சங்கடமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுப் பெண் என்பதால் இப்படியா?: இதற்கு மேலும் அதிர்ச்சியளிக்கும் வகையில், வெளிநாட்டுப் பெண்கள் குறித்த தவறான கண்ணோட்டத்துடனும் அந்த நபர் பேசியதாக எல்லி கூறியுள்ளார். வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக தன்னைப் பற்றி இப்படியொரு பொதுவான கருத்தை முன்வைத்தது மிகவும் அவமானமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு நடிகையின் திறமை, உழைப்பு ஆகியவற்றைத் தாண்டி அவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவரை அணுகுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதையே எல்லியின் அனுபவம் உணர்த்துகிறது.

திரைத்துறையில் வாய்ப்புக்காக வரும் பெண்கள் எதிர்கொள்ளும் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், எல்லி அவ்ராமின் இந்த வெளிப்படையான பேச்சு மீண்டும் காஸ்டிங் கவுச் விவகாரத்தை பேசுபொருளாக்கியுள்ளது. திரைத்துறையில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை வெளிப்படையாக பகிர்ந்துள்ள எல்லியின் பேச்சு தற்போது பாலிவுட் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கவனம் பெற்று வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES