பாரதி கண்ணம்மா சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஆரி! ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ

பாரதி கண்ணம்மா சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஆரி! ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாரதி கண்ணம்மா, முக்கிய சீரியலான பாரதி கண்ணம்மாவை காண பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் பாரதி கண்ணம்மா தொடருடன் மற்றுமொரு பிரபல ராஜா ராணி 2 சீரியல் இணைந்து மெகா சங்கமம் நடந்து வருகிறது.

இந்த தொடரில் அண்மையில் தான் குக் வித் கோமாளி பிரபலங்களான சிவாங்கி, பாலா, சரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான சுரேஷ் சக்ரவர்த்தியும் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு குடும்பங்களும் சேர்ந்து சூப்பர் குடும்பம் என்கிற போட்டியில் கலந்துகொள்வது போலான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் நடிகரும் பிக்பாஸ் வின்னருமான ஆரி கலந்துகொள்கிறார்.

மேலும் ஆரி இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசு கொடுத்து கவுரவிப்பது போன்ற காட்சிகள் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியலில் மாஸ் என்ட்ரி கொடுத்த பிக்பாஸ் ஆரி! ரசிகர்களை  கவர்ந்த ப்ரோமோ - Cineulagam

LATEST News

Trending News

HOT GALLERIES