காதலை அறிவித்த பவி டீச்சர் பிரிகிடா.. அந்த நடிகர்தான் காதலர்.. திருமணம் எப்போது தெரியுமா?

காதலை அறிவித்த பவி டீச்சர் பிரிகிடா.. அந்த நடிகர்தான் காதலர்.. திருமணம் எப்போது தெரியுமா?

சென்னை: பவி டீச்சர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பிரிகிடா. தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர்; வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் நேற்று தன்னுடைய காதலை வெளிப்படையாக அறிவித்தார். அவரது காதலுக்கு வீட்டு சம்மதமும் கிடைத்துவிட்டதன் காரணமாக அவர் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஆஹா கல்யாணம் என்ற சீரிஸில் பவி டீச்சர் ரோலை ஏற்று நடித்தவர் பிரிகிடா. அதில் அவரது நடிப்பும், அழகும் அனைவரையும் ஈர்த்துவிட; ரசிகர்கள் மத்தியில் பவி டீச்சர் என்றே ஃபேமஸ் ஆனார். மேலும் அவருக்கு திரைத்துறையில் பெரிய இடம் காத்திருக்கிறது என்றும் பலரால் ஆரூடம் கூறப்பட்டது. அதன்படி அவரும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Brigida Confirms Relationship with Actor Ananth Romantic Birthday Post Sparks Wedding Buzz

இரவின் நிழல் படத்தில் அப்படி: அதன்படி விஷால் நடித்த அயோக்யா படத்தில் நடிகையாக அறிமுகமான அவர்; தொடர்ந்து வர்மா, மாஸ்டர், வேலன், இரவின் நிழல், கருடன், கோழிப்பண்ணை செல்லதுரை, மார்கன்,இட்லி கடை, ஹாட் ஸ்பாட் 2 ஆகிய படங்களில் நடித்தா. இவற்றில் இட்லி கடை, கருடன் தவிர்த்து மற்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியும் பெறாமல் அவரை ரொம்பவே சோதித்தது.

நிர்வாண நடிப்பு: பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் படத்தை அவர் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் அப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதேசமயம் அப்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்திருந்தது அந்த நேரத்தில் பேசுபொருளானது. அந்த நிர்வாண காட்சியில் துளி ஆபாசம் கூட இல்லாமல் பார்த்திபன் தனது அனுபவத்தால் சூப்பராக படம் பிடித்திருந்தார்.

காதலை அறிவித்த பிரிகிடா: நிர்வாணமாக நடித்தாலும் நினைத்த அளவுக்கான வெளிச்சம் இன்னமும் அவருக்கு கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க அவர் தன்னுடைய காதலை அறிவித்திருக்கிறார். அதன்படி நடிகர் ஆனந்த் என்பவரை அவர் காதலிக்கிறாராம். நேற்று ஆனந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட போஸ்ட்டில் பிரிகிடா இதனை உறுதி செய்திருக்கிறார்.


எப்போது திருமணம்?: இதுகுறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "என் ஸ்டார்மேனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். சினிமா எனக்கு கனவுகளை தந்தது. வாழ்க்கை எனக்கு உன்னை தந்தது. நாம் ஒருபோதும், 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டதில்லை. ஆனால் எப்போது என்று தெரியவில்லை. அந்த உணர்வே நமது வாழ்க்கையில் காதலாக மாரிவிட்டது.

என்றென்றும் என்னுடையவனாக இருக்கும் உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இவர்களது காதலுக்கு வீட்டு சம்மதமும் கிடைத்துவிட்டதால் இந்த வருடத்துக்குள்ளேயே திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறார்களாம். ஆனந்த்தை பொறுத்தவரை மீசைய முறுக்கு, நண்பன் ஒருவன் வந்த பிறகு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
 

LATEST News

Trending News