14 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிளாஸ்ட்
தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஹீரோவாக நடித்து கடந்த மே 28-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பிளாஸ்ட்.

இப்படத்தில் பல அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இப்படத்தை இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
வசூல்
ஆக்ஷன் பேமிலி டிராமா என்கிற கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த பிளாஸ்ட் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால், முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது பிளாஸ்ட்.
இந்த நிலையில், 14 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 14 நாட்களில் உலகளவில் ரூ. 64 கோடிக்கும் மேல் பிளாஸ்ட் திரைப்படம் வசூல் செய்துள்ளது.