தாக்கப்பட்ட வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர்.. போதையில் அடித்த விஜய் டிவி பிரபலங்கள்.. வீடியோ
சென்னை: குக் வித் கோமாளி சீசன் 7 தொடங்கி சிறப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் இந்த வாரத்திற்கான எபிசோட் படமாக்கப்பட்டு கொண்டிருந்தபோது, கானா வினோத், புகழ் மற்றும் மாகாபா ஆனந்த் உள்ளிட்டோர் இணைந்து வாட்டர் மெலன் திவாகரை தாக்கியதாக ஏற்கனவே இணையத்தில் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனாலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் வராததால் இதனை பலரும் கண்டு கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் வாட்டர் மெலன் திவாகர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ள விஷயம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கானா வினோத், புகழ் மற்றும் மாகாபா ஆனந்த் என மூவரும் இணைந்து தகாத வார்த்தையில் பேசினர். இது தொடர்பாக அவர்களை திருப்பி கேட்டதற்கு, அவர்கள் மூவரும் இணைந்து என்னைத் தாக்கினர். இதில் மாகாபா ஆனந்த் போதையில் இரும்பு ராடு கொண்டு என்னை தாக்கினார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் நான் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மூவருக்கும் என் மீது பொறாமை, எனது வளர்ச்சியின் மீது பொறாமை, நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்னதாகவே 5 படங்களில் நடித்து விட்டேன். அதன் பின்னரும் வெளிவந்து, நான் படங்களில் நடித்து விட்டேன். அந்த பொறாமையால் அவர்கள் என்னை தாக்கியுள்ளனர். அவர்கள் நடிக்கும் படங்களில் அவர்கள் வரும் காட்சிகளில் ரசிகர்கள் அவர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதில்லை. ஆனால் எனக்கு அப்படி இல்லை, என்னை திரையில் பார்த்தாலே ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
படித்த மருத்துவர்: இதன் காரணமாக வயிற்றெரிச்சலில் அவர்கள் மூவரும் என்னை அடித்து விட்டார்கள். கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் இவர்கள் எல்லாம் நல்லவர்கள் இல்லை. மூவரும் இணைந்து என்னை தாக்கினர். ஒரு படித்த மருத்துவராக நான் முறையாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நான் ஸ்டாராக மாறிவிடுவேன், என்ற பொறாமையில் அவர்கள் இப்படி நடந்து கொண்டுள்ளார்கள்.
வாய்ப்பு பறிபோய்விட்டது: புகழ் மற்றும் கானா வினோத் என இவர்களால் என்னுடைய வாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. என்னுடைய வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. என் பின்னால் 8 கோடி மக்கள் இருக்கிறார்கள். இறைவன் இருக்கிறார், நிச்சயம் தமிழ் சினிமாவில் நான் கதாநாயகனாக வலம் வருவேன்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நீதி வெல்லும்: மது அருந்துவது தனிப்பட்ட விஷயம் ஆனால் மது அருந்திவிட்டு மற்றவர்களை தாக்குவது என்பது அநாகரிகமான செயல் இது போன்ற மோசமான நபர்களின் முகத்திரையை நான் கிழிக்கிறேன். நான் ஒன்றும் அவர்களைப் போல் விளம்பரம் செய்து சம்பாதிக்கவில்லை நான் உழைத்து சம்பாதிக்கிறேன் நீதி வெல்லும் என்று அந்த வீடியோவில் வாட்டர் மெலன் திவாகர் பேசி உள்ளார்.