இல்லத்தரசிகளை கவர்ந்த டாப் 5 சீரியல்கள்.. உங்களுக்கு பிடித்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்!

இல்லத்தரசிகளை கவர்ந்த டாப் 5 சீரியல்கள்.. உங்களுக்கு பிடித்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்!

சென்னை: சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சீரியலில் குடும்ப உறவுகள், தாய்-மகள் பாசம், மாமியார்-மருமகள் உறவு, வாழ்க்கை போராட்டங்கள் போன்ற உணர்ச்சி மிகுந்த கதைகள் அதிகம் இடம்பெறுவது பெண்களை ஈர்க்க முக்கிய காரணமாகும். வீட்டு வேலைகள் நடுவே ஓய்வாக நேரத்தை கழிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் சீரியல்கள் உதவுகின்றன. குறிப்பாக மாலை நேரங்களில் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த முதல் ஐந்து சீரியல்கள் என்னென்ன என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை கோமதி பிரியா. தற்போது தேர்தல் நேரம் என்பதால் சீரியலிலும் மீனா தலைவி பதவிக்கு போட்டியிடுவது போல கதை நகர்கிறது. 900 ஆயிரம் எபிசோடுகள் கடந்து சென்று கொண்டு இருக்கும் இந்த சீரியலை, எஸ் குமரன் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Top 5 Tamil serials Serial 5

கயல்: மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக கயல் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக், அவினாஷ் அசோக், வழக்கு எண் முத்துராமன், வடிவுக்கரசி என பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த சீரியலில் கயலில் தங்கை ஒருவரை காதலிப்பதாக சொல்ல ஒட்டுமொத்த குடும்பரும் நிலைகுலைந்து போய் உள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மூன்றாவது இடத்தில் இருக்கும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் கடந்த சில மாதங்களாக சுவாரசியமே இல்லாமல் இருந்த நிலையில், தற்போது புது வில்லனாக ராவணன் என்ட்ரி கொடுத்து ஆதி முத்து குடும்பத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க துடிக்கிறான். மற்றொரு பக்கம் ஜனனி, குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்ப நினைக்கிறாள் இப்படித்தான் இந்த சீரியலில் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலில் வேலன் ராமமூர்த்தி, பார்வதி, இசைப்பிரியா,பிரியதர்ஷினி, விபு என பலர் நடித்துள்ளனர். எதிர்நீச்சல் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.

Top 5 Tamil serials Serial 5

மூன்று முடிச்சு: சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'மூன்று முடிச்சு' சீரியல், குடும்ப ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் 2வது இடத்தில் உள்ளது. பணம், அந்தஸ்து மட்டும் இருந்தால் போதும் என நினைக்கும் மாமியாருக்கும், அன்பு, உழைப்பு தான் உண்மையான செல்வம் என நினைக்கும் மருமகளுக்கும் இடையிலான மோதல் தான் சின்ன மருமகள். இந்த சீரியலில் ஸ்வாதி கொண்டா லீட் ரோலிலும் அவருக்கு ஜோடியாக நியாஸ் கானும் நடித்து வருகின்றனர். சிங்கப்பெண்ணே: இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த சீரியலாக இருப்பது சிங்கப்பெண்ணே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் இந்த சீரியலில் தற்போது இந்த சீரியலில் ஆனந்தி விபத்தில் சிக்கிவிட அவளது கருவில் இருக்கும் கருவிற்கு என்ன ஆனது என சீரியல் பரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES