காடன் திரைவிமர்சனம்
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்கள் பல தடைகளை தண்டி வெளியாகியுள்ளது. அப்படி இன்று திரையரங்குகளில் விஷ்ணு விஷால் மற்றும் ராணா டகுபதி நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் காடன். மக்களின் பிரச்சனைகளை மட்டுமே படங்களில் பேசி வரும் நேரத்தில், வனத்தில் வாழும் விலங்குகளின் பிரச்சைகளை பற்றியும் காடன் படம் பேசியுள்ளது. அப்படி உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா? இல்லையா? என்று பார்ப்போம்.
கதைக்களம்
கோயம்புதூர் அருகே உள்ள ஒரு குறிப்பிட்ட காட்டு பகுதியில் இருக்கும் லட்ச கணக்கான மரங்களுக்கும், யானை உள்ளிட்ட பல விலங்குகளுக்கு காவலனாக இருக்கிறார் {காடன்} ராணா. ஆனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் அங்கே டவுன்ஷிப் ஒன்றை உருவாக்க முயற்சி செய்கிறார்.
அதனை எதிர்க்கும் காடன், சட்டப்படி தடை வாங்குகிறான். அதனால் அவனை மீது வீன் பழி சுமத்தி சிறைக்குள் அடைகிறார்கள். காடுகளை சற்று டவுன்ஷிப்காக சுவறுகளை எழுப்புகின்றனர். சிறையில் இருந்து விடுதலையாகி வந்த காடன், டவுன்ஷிப்பிற்கு எதிராக களமிறங்கி போராடுகிறான். அந்த போராட்டத்தில் காடன் வெற்றிபெற்றானா, இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
நடிகர் ராணாவின் நடிப்பில் மிகவும் இயல்பாக உள்ளது. ஆனால் இவரது உடல்மொழி நடிப்பு, நடிகர் விக்ரமின் பிதாமகன் கதாபாத்திரத்தை நியாபகம் படுத்திக்கிறது.
விஷ்ணு ஷால் கும்கி யானை வளர்க்கும் நபராக நடித்துள்ளார். சில காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் படத்தை பார்க்கும் அனைவரின் கண்களையும் கலங்க வைக்கிறார் விஷ்ணு விஷால்.
ஒரு பக்கம் பத்திரிகையாளராக ஒரு கதாநாயகி, மறுபுறம் காட்டில் திரியும் தீவிரவாதியாக இரண்டாம் கதாநாயகி நடித்துள்ளார்.
இதுவரை தமிழ் திரையுலகில் வெளியான பல திரைப்படங்களில் பார்த்த Templet இருக்கும் வில்லன் கதாபாத்திரத்தில் ஆனந்த் மகாதேவன்.
விஷ்ணு விஷால், ராணா இருவரை தவிர ,மற்றவர்களின் கதாபாத்திரங்கள் தேர்வில் இயக்குனர் பிரபு சாலமன் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.
காட்டிற்குள் இருக்கும் காட்சிகள் அனைத்துமே அருமையாக ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏ.கே. அசோக் குமார்.
படத்தின் கதை பாராட்டுக்குரியது. ஆனால் திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
க்ளாப்ஸ்
ராணாவின் நடிப்பு
ஒளிப்பதிவு
கதை
பல்ப்ஸ்
கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்
திரைக்கதை விறுவிறுப்பில்லை
மொத்தத்தில் காடுகளையும், விலங்குகளையும் பற்றி பேசும் விஷயமாக உருவாகியுள்ளது காடன்.