AI புகைப்படத்தால் கடும்கோபத்தில் நடிகை நிவேதா தாமஸ்..
தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். அதை தொடர்ந்து, இவர் கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார்.
இதனையடுத்து உடல் எடையை கூட்டி கிண்டலுக்கு ஆளான நிவேதா தற்போது, உடல் எடையை குறைத்து பழைய ஃபார்மிற்கு வந்துள்ளார். தற்போது ஒரேவொரு புகைப்படத்தை பகிர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை நிவேதா தாமஸ்.
AI
ஆனால் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் AI மூலம் எடிட் செய்து கவர்ச்சி புகைப்படமாக மாற்றி வைரலாக்கினர். இதனையறிந்த நிவேதா தாமஸ் கடும் கோபத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து கொந்தளித்துள்ளார்.

இதேபோல் நடிகை ஸ்ரீலீலாவும் தன்னுடைய ஏஐ புகைப்படங்களுக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.