நடிகை சைத்ராவை ஆட்கள் வைத்து கடத்திய கணவர்.. அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

நடிகை சைத்ராவை ஆட்கள் வைத்து கடத்திய கணவர்.. அதிர்ச்சி கொடுத்த சம்பவம்

கன்னட சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சைத்ரா. அவரது கணவர் ஹர்ஷவர்தன் தயாரிப்பாளராக உள்ளார். 2023ல் திருமணம் நடந்துள்ள நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நடிகை சைத்ரா தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

நடிகை சைத்ராவை ஆட்கள் வைத்து கடத்திய கணவர்.. அதிர்ச்சி கொடுத்த சம்பவம் | Kannada Serial Actress Chaitra Kidnap Case

இந்த நிலையில், நடிகை சைத்ராவை அவரது கணவர் ஹர்ஷவர்தன் கடத்தி சென்றுள்ளாராம். மைசூருக்கு படப்பிடிப்புக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு சைத்ரா சென்ற நிலையில், அவரை ஹர்ஷவர்தன் ஆட்கள் வைத்து காரில் கடத்தி சென்றுள்ளார்.

கடத்தப்பட்டு பல மணி நேரத்திற்கு பின் நடிகை சைத்ரா எப்படியோ அவரது நண்பருக்கு போன் கால் மூலம் இதை தெரிவித்துள்ளார். அவர் சைத்ரா குடும்பத்திற்கு இந்த தகவலை சொல்ல, அவர்கள் உடனடியாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.

நடிகை சைத்ராவை ஆட்கள் வைத்து கடத்திய கணவர்.. அதிர்ச்சி கொடுத்த சம்பவம் | Kannada Serial Actress Chaitra Kidnap Case

அதன்பின் சைத்ராவின் அம்மாவுக்கு போன் செய்த ஹர்ஷவர்தன், தங்களது ஒரு வயது பெண் குழந்தையை கொண்டு வந்து கொடுத்தால்தான் சைத்ராவை விடுவிருப்பேன் என மிரட்டியுள்ளார் என கூறப்படுகிறது. குழந்தைக்காக கணவரே தனது மனைவியை கடத்தியது பற்றி தற்போது போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News