2027ல் மீண்டும் நடிக்க வருவார்!! ஆதவன் பேச்சால் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்..
நடிகர் விஜய்யின் அரசியல் குறித்து பல பிரபலங்கள் பேட்டிகளில் சிலர் பாசிட்டிங்-ஆகவும், சிலர் நெகட்டிவ்-ஆகவும் பேசி வருகிறார்கள். அப்படி பிரபல தொகுப்பாளரும் மெமிக்ரீ ஆர்ட்டிஸ்டுமான ஆதவன், விஜய் குறித்து முன்னணி நடிகர் என்று பேசியிருக்கிறார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆதவன், முன்னதாக அந்த நடிகரின் படம் என்றாலே வாய்ப்பு கிடைக்காது என்ற பயத்தில் பலர் பேசாமல் இருந்தனர். ஆனால் அவர் இதுகுறித்து வெளிப்படையாகவே பேசினார்.
இது என் கடைசி படம் என்று அவர் கூறியிருந்தாலும், பின் மீண்டும் நடிக்க வந்தால் அதற்கான விளக்கத்தை அவரே சொல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
எப்படியாவது 2027ல் அவர் கண்டிப்பாக மீண்டும் நடிக்க வருவார். ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே மீண்டும் நடிக்க வந்தேன் என்றும் அவர் சொல்வார் என்று ஆதவன் பேசியிருக்கிறார்.