கூட்ட நெரிசலில் உயிரிழப்பு.. நிவாரண உதவியை அறிவித்த தவெக தலைவர் விஜய்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வரும் இவர் தொடர்ந்து ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதன்படி, கரூரில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அதில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த செய்தி மொத்த தமிழநாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. இது தொடர்பாக நேற்று விஜய் அவருடைய வேதனையை தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில், அந்த பிரச்சாரத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ. 20 லட்சம், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்வதாக தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.