திருமணம் குறித்து பேசிய நடிகை கோவை சரளா.. என்ன கூறியுள்ளார் பாருங்க
தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை திறமையால் மக்களின் மனதை கவர்ந்து இன்று வரை நீடித்து நிலைத்திருக்கிறார் நடிகை கோவை சரளா.
1979ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை துவங்கி பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். நகைச்சுவையில் நடிகர்களால் மட்டுமல்ல நடிகையாலும், மக்களை மகிழ்விக்க முடியும் என ஆச்சி மனோரமாவுக்கு பிறகு காட்டியது நடிகை கோவை சரளாதான்.
சினிமாவில் பல சாதனைகள் செய்துள்ள நடிகை கோவை சரளா 63 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில், பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து மிகவும் வெளிப்படையாக நடிகை கோவை சரளா பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: "எனக்கு கல்யாணம் ஆயவில்லையென்று நான் கவலைப்படவே இல்லை. இப்போ கல்யாணம் பண்ணவங்களை பார்த்து சிரிச்சிட்டு இருக்கேன். நான் சொன்னா கேட்க மாற்றீங்க. கல்யாணம் பண்ணிட்டா மட்டும் கடைசி வரை புருஷன் நம்ம கூடவேவா வரப்போறாரு. அவர் ஓடி போறாரோ, இல்லை செத்து போறாரோ? எப்படியும் ஒரு நாள் போகத்தானே போறார். கடையில் நாம் தனியாக தானே இருந்தாகணும்" என கூறியுள்ளார். .