இப்போ நான் இப்படி இருக்க அல்லு அர்ஜுன் தான் காரணம்!! நடிகை தமன்னா ஓபன் டாக்..

இப்போ நான் இப்படி இருக்க அல்லு அர்ஜுன் தான் காரணம்!! நடிகை தமன்னா ஓபன் டாக்..

சினிமா பயணத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து டாப் நடிகையாக தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவில் சென்சேஷ்னல் நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை தமன்னா.

இப்போ நான் இப்படி இருக்க அல்லு அர்ஜுன் தான் காரணம்!! நடிகை தமன்னா ஓபன் டாக்.. | Allu Arjun Gave Me The Floor Steps Tamannaah

சமீபகாலமாக, சிறப்பு தோற்றத்திற்காக பாடலுக்கு படுகிளாமராக நடித்து இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கிய வெப் தொடரில் கிளாமர் பாடலுக்கு ஆட்டம் போட்டு பாலிவுட் சினிமாவையே அதிரவைத்தார்.

இந்நிலையில், டு யூ வான்ன பார்ட்னர் என்ற வெப் தொடரில் நடித்துள்ள தமன்னா, அதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பற்றி பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதில், அப்போது நான் தமிழ், தெலுங்கு மொழியில் எல்லா வகையான கமர்ஷியல் படங்களில் நடித்தேன்.

ஒவ்வொன்றிலும் நான்கு முதல் ஐந்து பாடல்கள் இருக்கும். ஆனால் கடினமான நடன அசைவுகளை முயற்சிக்க என்னைத்தூண்டியது அல்லு அர்ஜுன்தான். என்னை ஊக்குவித்தார்.

அவருடன் பத்ரிநாத் படத்தில் நடித்தப்பின் எனக்கு நிறைய நடனமாடும் வாய்ப்புகள் கிடைத்தது. சிறப்பு பாடல்களால் தான் பிரபலமடைந்திருக்கிறேன் என்று தமன்னா ஓபனாக பேசியுள்ளார்.

LATEST News

Trending News