2 ஆண்டு திருமண வாழ்க்கை!! மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர் சர்வானந்த்?

2 ஆண்டு திருமண வாழ்க்கை!! மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர் சர்வானந்த்?

காதல்னா சும்மா இல்ல என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் சர்வானந்த். ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவான எங்கேயும் எப்போதும் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த சர்வானந்த், சேரன் இயக்கத்தில் ஜேகே எனும் நண்பணின் வாழ்க்கை, கணம் போன்ற படங்களில் நடித்தார். பின் தெலுங்கில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை தன் நடிப்பால் ஈர்த்து வருகிறார்.

கடந்த 2023ல் ரக்சிதா என்பவரை காதலித்து பின் திருமணம் செய்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள லீலா பேலஸ் அரண்மனையில் பிரமாண்டமுறையில் அவர்களின் திருமணம் நடைபெற்றது.

2 ஆண்டு திருமண வாழ்க்கை!! மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர் சர்வானந்த்? | Married Life After 2 Years Tamil Actor Divorcing

தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் சர்வானந்தின் குடும்ப வாழ்க்கை தற்போது பிரியும் நிலையில் இருக்கிறது என்று கூறப்படுகிறது. சர்வானந்த் - ரக்சிதா தம்பதிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டதாகவும் அண்மைக்காலமாக சர்வானந்த் குழந்தை புகைப்படங்களை வெளியிடும் அதே வேளையில் தனது மனைவியின் புகைப்படத்தை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மனக்கசப்புகள் காரணமாக இருவரும் ஒன்றாக வாழ்வில்லை என்ற செய்தியும் வெளியாகியது. இதனால் இருவரும் விவாகரத்து பெறப்போகிறார்கள் என்ற ஊகங்களும் எழுந்து வருகிறது. இதுகுறித்து சர்வானந்தின் உறவினர் ஆந்திர ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவல் எதுவும் உண்மையல்ல என்று கூறியிருக்கிறாராம்.

2 ஆண்டு திருமண வாழ்க்கை!! மனைவியை விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர் சர்வானந்த்? | Married Life After 2 Years Tamil Actor Divorcing

மேலும் சர்வானந்த் தற்போது ஸ்ரீராம் ஆதித்யா படப்பிடிப்பில் பிசியாக இருப்பதகவும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவதன் காரணமாக இருவரும் இரண்டு வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இருவரும் தனித்தனியாக இருந்தாலும் விவாகரத்து செய்யும் அளவுக்கு இல்லை என்பதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இருவருக்கும் இடையேயான சில தனிப்பட்ட புரிதல்கள் அவர்களின் உறவில் தூரத்தை உருவாக்கியதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதேசமயம் இருவருக்கும் நெருக்கமான நண்பர்களும் குடும்ப உறுப்பினர்க்ளும் இருவரையும் இணைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். 

LATEST News

Trending News