57 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளமல் இருப்பது ஏன்.. எஸ்.ஜே. சூர்யா கொடுத்த பதில்

57 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளமல் இருப்பது ஏன்.. எஸ்.ஜே. சூர்யா கொடுத்த பதில்

வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் குஷி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் எஸ்.ஜே. சூர்யா. இயக்குநராக இரண்டு ஹிட் படங்களை கொடுத்துவிட்டு, பின் தானே ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார்.

ஒரு காலகட்டத்திற்கு பின் சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இசை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்து தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மான்ஸ்டர், ஸ்பைடர், இறைவி என தொடர்ந்து தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

57 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளமல் இருப்பது ஏன்.. எஸ்.ஜே. சூர்யா கொடுத்த பதில் | Sj Surya Talk About His Marriage

குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் இவர் நடித்தாலே அந்த படம் ஹிட் என்பதுபோல் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் எஸ்.ஜே. சூர்யா 57 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், எப்போது திருமணம் என இவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, "நான் சுதந்திர பறவை, அப்படியே இருந்திவிடுகிறேன், விடுங்க" என கூறியுள்ளார்.    

LATEST News

Trending News