16 வயதில் அந்த நடிகரை காதலித்தேன்!! பிரபல நடிகையின் மகள் ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா 90களில் டாப் நடிகையாக திகழ்ந்தவர். நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், 16 வயதில் இருந்து, தான் காதலித்த நடிகர் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், பிரபு சாரை 16 வயதில் இருந்து காதலித்தேன். அவரது மனைவி புனிதாவிற்கும் இது தெரியும். பிரபு சார் விடிடில் எல்லோருக்கும் இது தெரியும்.
எங்க அம்மா எப்படி சிவாஜி தாத்தாக்கு ரசிகையோ அதேப்போன்று என் தலையில் நான் அக்னி நட்சத்திரம், பாலைவன ரோஜாக்கள் படம் பார்த்து பிரபுவிற்கு ரசிகையானேன் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை லட்சுமி பாஸ்கரன்.