நடிகை ராதிகா சரத்குமாரின் தாயார் காலமானார்
தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. ஏகப்பட்ட ஹிட் படங்கள் கொடுத்து மக்களின் மனதை கவர்ந்த இவர் சின்னத்திரையிலும் நுழைந்து நிறைய சாதனைகள் செய்தார்.
சீரியல்கள் நடித்தும், தயாரித்தும் இருந்தார். இப்போது படங்களின் தரமான கதாபாத்திரங்கள் நடித்து மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
தற்போது இவரது வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது.
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதாராதா நேற்று செப்டம்பர் 21 உயிரிழந்துள்ளார்.