புதிய போட்டோ.. மீண்டும் விஜய்-திரிஷா சர்ச்சை.. தீயாய் பரவும் புகைப்படம்..

புதிய போட்டோ.. மீண்டும் விஜய்-திரிஷா சர்ச்சை.. தீயாய் பரவும் புகைப்படம்..

நடிகை திரிஷா கிருஷ்ணன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் வெளியானவுடன், அவர் விஜய் உடனான ரிலேஷன்ஷிப் கிசுகிசுவில் மீண்டும் சிக்கியுள்ளார்

பலர் இந்த புகைப்படத்தை விஜய்யின் அரசியல் பரப்புரை வாகனத்தில் (பேருந்து அல்லது கார்) அவர் இருப்பதாக தவறாக புரிந்துகொண்டு, கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. தேர்தல் அருகில் இருப்பதால், 'தேர்தல் வரை சும்மா இருங்க' என்று சிலர் கமெண்ட் செய்வதும் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிஷாவின் இந்த பதிவு, அவரது சமீபத்திய செயல்பாடுகளுடன் இணைந்து பார்க்கப்படுகிறது. ஜூன் 22 அன்று விஜய்யின் பிறந்தநாளுக்காக அவர் பகிர்ந்த புகைப்படம் – விஜய் திரிஷாவின் நாய் இஸ்ஸியுடன் விளையாடும் காட்சி – ஏற்கனவே ரிலேஷன்ஷிப் டிரமாவை தூண்டியது.

'ஹேப்பி பர்த்டே பெஸ்டெஸ்ட்' என்ற கேப்ஷன், 'பெஸ்டெஸ்ட்' என்ற சொல்லால் ரசிகர்களை குழப்பியது. பின்னர், "உங்கள் இதயம் லவ்வால் நிரம்பியிருந்தால், சிலர் குழம்பிவிடுவார்கள்" என்ற கிரிப்டிக் போஸ்ட் பகிர்ந்து, கிசுகிசுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த விமான புகைப்படம், கீர்த்தி சுரேஷ் வெற்றி விழாவுக்கு தனியார் ஜெட்டில் விஜயுடன் சென்றது போன்ற பழைய சம்பவங்களை நினைவூட்டுகிறது.

LATEST News

Trending News