அன்று நிறத்தால் அவமானப்படுத்தப்பட்ட நடிகை, இன்று மாஸ் காட்டும் டாப் நாயகி.. இவரா?
Bekhudi என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கஜோல். தொடர்ந்து பாலிவுட்டில் நடித்து வந்த இவர், தமிழில் 1997ல் வெளிவந்த மின்சார கனவு படத்தில் நடித்தார்.
இதன்பின், பல ஆண்டுகள் கழித்து, தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். கஜோல் கலைத்துறையில் செய்த செயல் மற்றும் அவரது இந்திய சினிமா பங்களிப்பை முன்னிட்டு அவருக்கு கவுரவ விருதான ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது.
இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் கஜோல் பேட்டி ஒன்றில் சினிமா தொடக்கத்தில் அவர் சந்தித்த பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், " நீ கருப்பாக இருக்கிறாய், குண்டாக இருக்கிறாய், நாயகி மெட்டீரியல் இல்லையே என்று பலர் என்னை கேலி செய்துள்ளனர்" என்று தெரிவித்தார். இதை கேட்டு ரசிகர்கள் ஷாக் அடைந்துள்ளனர்.