ப்ரொடியூசரை மொட்டை அடிக்க பார்த்த ரவி மோகன்… அம்பலமான தில்லாலங்கடி வேலை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவரின் படங்கள் மற்ற நடிகர்களின் படங்களை விட மாறுபட்டு இருப்பதால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த சில மாதங்களாக ரவி மோகினின் படங்கள் பெரிதும் பேசப்படும் அளவுக்கு இருந்ததில்லை. திரை வாழ்க்கை தான் இப்படி இருக்கு என்றால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையும் அவரை பெரிதாக பாதிப்புக்கு உள்ளாகியது.
ஆர்த்தி என்பவரை காதலித்து திருமண செய்து கொண்டார் ரவி மோகன். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் இருவரும் பிரிய இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இந்த செய்தி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் ரவி மோகன் விடாப்பிடியாக விவாகரத்து மீண்டும் என்று நிற்கிறார் ஆனால் ஆர்த்தியோ விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்தார் இந்நிலையில் இவர்களது வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது.
வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ரவி மோகன் அடுத்தடுத்து படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்திற்கு ”ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் தொடக்க விழாவில் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர். இந்நிலையில் ரவி மோகன் தற்போது பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில்,” பி டி ஜி என்ற நிறுவனம் ரவி மோகனுக்கு ஆறு கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகை கொடுத்துள்ளது. ஆனால் ரவி மோகன் இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் வாங்கின பணத்தை திரும்ப கொடுக்காமல், கொடுத்த பணத்திற்கு கால் சீட் கொடுக்காமல் இழுத்து அடித்து வந்தார். பொறுத்து பொறுத்து பார்த்த தயாரிப்பு நிறுவனம் ரவி மோகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதைப் பற்றி விமர்சித்துள்ளார் வலைப்பேச்சு சக்திவேல் அதில்
ரவி மோகன் 16 கோடியில் ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கிறார். அதுவும் இவரே தயாரிக்கலாம் என்று முடிவு எடுத்து உள்ளார். அதன் பிறகு இவரை தேடி பி டி ஜி நிறுவனம் வந்துள்ளது. ரவி மோகன் அந்த 16 கோடி ப்ராஜெக்டை 25 கோடியாக மாற்றி அவர்கள் தலையில் வைத்து விட்டார். சில நாட்களுக்குப் பிறகு இந்த விஷயம் எப்படியோ தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிய வந்ததுள்ளது. அதனால் கோபம் அடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹீரோ ரவி மோகன் மீது வழக்கு தொடர்ந்துள்ளது”. என்று கூறியுள்ளார்.