ரஜினி படம் தோல்வி.. பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர் விஜய்..

ரஜினி படம் தோல்வி.. பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர் விஜய்..

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் கூலி திரைப்படம் வெளிவந்தது. விமர்சன ரீதியாக பின்னடைவை இப்படம் சந்தித்தாலும் கூட, வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இதுவரை கூலி உலகளவில் ரூ. 515 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

ரஜினிகாந்தை போலவே சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வரவேண்டும். அவருடைய இடத்தை பிடிக்கவேண்டும் என முயற்சி செய்த பலரில் ஒருவர் நடிகர் விஜய். ரஜினியின் தீவிர ரசிகரும் ஆவார். இதை விஜய்யே கூறியுள்ளார். ஆனால், ரஜினியின் பாபா படத்தின் தோல்வியை விஜய் கொண்டாடியதாக ஒரு சர்ச்சை சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரஜினி படம் தோல்வி.. பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர் விஜய்.. | Vijay Celebrated Rajnikanth Failure

இதுகுறித்து பிரபல பத்திரிக்கையாளர் அந்தந்தன் பேசியுள்ளார். "அது உண்மைதான், ரஜினியின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றே முயற்சி செய்த பல பேரில் விஜய்யும் ஒருவர். அன்றைய காலகட்டத்தில் சுப்ரீம் ஸ்டார் என சரத்குமார் பட்டம் போட்டுக்கொண்டார். அவங்க எல்லாருக்குமே ரஜினி இடத்தின் மீது கண்ணு இருந்தது. இன்னொரு பக்கம் விஜயகாந்த் இருந்தார். ஆனால், அவர்கள் எல்லாம் பார்ட்டி கொடுக்கவில்லை.

ஆனால், அந்த படத்தின் தோல்வியை விஜய் கொண்டாடியதாக அப்போதே தகவல் வந்தது. நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம். ஏன் அவர் இப்படி செய்யவேண்டும் என்று. ஆனால், அதற்கு பின் ரஜினி சில வருடங்கள் ஒதுங்கி இருந்தார். அதன்பின் மாபெரும் வெற்றியை கொடுத்து, இது என்னுடைய கோட்டை என ஜெயித்து காட்டினார் ரஜினி" என கூறியுள்ளார். 

LATEST News

Trending News