நான் இனி நடிக்கலனாலும் swiggy ஓட்டியாவது மக்களுக்கு உதவுவேன்.. எமோஷனலாக பேசிய பாலா
காந்தி கண்ணாடி படத்தின் மூலம் பாலா தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்களில் தன்னுடைய அசாத்திய திறமையை வெளிப்படுத்தி மக்களின் மனங்களை வென்றார் பாலா. அதன் பிறகு கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்தி திரையுலகத்தில் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார்.
தனக்கு கிடைக்கக்கூடிய வருமானங்களில் தனக்கென்று செலவழிக்காமல் மக்களுக்காக செலவு செய்து வந்தார். இதுவே மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. அதன் விளைவாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ”காந்தி கண்ணாடி திரைப்படம்” வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவில் பாலா எமோஷனலாக பேசி அரங்கத்தில் இருப்பவரை அழ வைத்து விட்டார் அதில்
“இந்த அரங்கில் நான் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாளைக்கு எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை. இது போதும் எனக்கு. இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முக்கியமான விஷயம் இயக்குனர் ஷெரிஃப் அண்ணன் தான் என்ன வச்சி யாராவது படம் எடுப்பாங்களா? என்று நினைத்துக் கொண்டிருக்கையில் ஒரு புரோடியூசரிடம் கதை சொல்லி இருக்கிறார். அவரும் அதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்”.
”நான் உடனே தூக்குங்கடா அந்த செல்லத்தை அப்படின்னு தயாரிப்பாளரை சந்திக்க சென்றேன். அன்று லாரன்ஸ் மாஸ்டர் உன்ன ஹீரோவா ஆக்குறேன்டா என்று சொன்ன அந்த வார்த்தை தான் என்னை இன்று ஹீரோவாக மாற்றியது. கிராமத்துல பிறந்து வளர்ந்து சாதாரண பெட்ரோல் பங்கில் தான் எங்க அப்பா வேலை பார்த்தாரு. அம்மா சாதாரண டெய்லர் தான். இன்னைக்கு ஒரு ஹீரோவா இந்த மேடையில் நிக்கிறேன் என்றால் அது தமிழ்நாட்டு மக்கள் எனக்கு போட்ட பிச்சை தான் அதுதான் உண்மை”.
“இன்னைக்கு நான் படம் நடித்து இருக்கேன் நாளைக்கு படம் நடிப்பேனானு தெரியாது நான் நடிக்கவில்லை என் வருமானத்திற்கு நான் உணவு டெலிவரி வேலை செய்தாலும் அதில் வரும் பணத்தை எல்லாம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு தான் கொடுப்பேன். அதை தவிர வேற எனக்கு எதுவுமே வேண்டாம்”. இன்று எமோஷனலாக பேசி அரங்கத்தில் இருப்பவர்களை கண் கலங்க வைத்தார்.