மமிதா பைஜூ To பிரியங்கா மோகன்!.. லோகேஷுக்கு அடிச்ச செம லக்கு.. மச்சம்தான்,..
மாநகரம் திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அதன்பின் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய கைதி படமும் பேசப்பட்டது. ஏனெனில் ஒரே இரவில் நடக்கும் கதைக்கு பரபரப்பான திரைக்கதை அமைத்து அசத்தியிருந்தார் லோகேஷ்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இதுவரை இப்படி ஒரு அனுபவம் கிடைத்ததில்லை என்பதால் படம் நல்ல வசூலை பெற்றது. அதோடு லோகேஷ் ரசிகர்களிடம் பிரபலமானார். அடுத்து விஜயை வைத்து மாஸ்டர் இயக்கியதும் லோகேஷ் பெரிய இயக்குனர்களில் ஒருவராக மாறினார். அந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்க கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்ததிலேயே அதிக வசூலை பெற்றது இந்த படம்தான்.
அடுத்து மீண்டும் விஜயை வைத்து லியோ, ரஜினியை வைத்து கூலி ஆகிய படங்களை இயக்கினார் லோகேஷ். கூலி படத்திற்காக 50 கோடி சம்பளம் வாங்கினார். லியோ, கூலி இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கூலி படம் கலையான விமர்சனங்களை பெற்றாலும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை செய்திருக்கிறது.
கூலி படத்திற்கு பின் கார்த்தியை வைத்து கைதி 2-வை லோகேஷ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பார்க்காத படி ரஜினி, கமல் இதுவரையும் வைத்து அவர் ஒரு படம் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஒரு பக்கம் சாணி காயிதம் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோவாக ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.
இந்த படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக நடித்த ஜெயிலர் படத்தில் நடித்த மிர்னா மேனனிடம் கேட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் அவர் மட்டும் அல்ல. பிரேமலு பட நடிகை மமீதா பைஜுவிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால் ’என்னிடம் கால்ஷீட் இல்லை’ என அவர் சொல்லிவிட டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்த யோகலட்சுமி, கூலி படத்தில் நடித்த ரக்ஷிதா மற்றும் பிரியங்கா மோகன் என ஒரு அரை ட்ஜன் நடிகைகளிடம் பேசியிருக்கிறார்களாம். இதில் யார் ஒப்புக்கொள்கிறார்களோ, யாரின் கால்ஷீட் ஒத்து வருகிறதோ அவரே லோகேஷின் ஜோடியாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.
விஜய், கமல், ரஜினி என பெரிய நடிகர்களை வைத்து இயக்கி பெரிய இயக்குனராக லோகேஷ் மாறி விட்டதால் கண்டிப்பாக அவருக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகைகள் போட்டி போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல நடிகைகளிடம் பேசுவதால் ‘லோகேஷுக்கு மச்சம்’ என கோலிவுட்டில் பேசப்படுகிறது.