இனி நெருக்கமான காட்சிக்கு நோ.. நானியுடன் நடித்து ஃபீல் பண்ணிய கீர்த்தி ஷெட்டி!!
இளம் நடிகைகளில் ஒருவராக நடிகை க்ரித்தி ஷெட்டி வலம் வருகிறார். தற்போது தமிழில் படங்கள் நடிக்க தொடங்கி உள்ள இவர் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக LIK படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
உப்பெனா என்ற படத்தின் மூலம் பிரபலமான க்ரித்திக்கு பின்னர் பல பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில், நானியுடன் ஜோடி சேர்ந்த 'ஷ்யாம் சிங்கா ராய்' என்ற படத்தில் நடித்திருந்தார்.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. சாய் பல்லவிக்குக் கிடைத்த அளவுக்குக் கூட க்ரித்திக்கு பெயர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் க்ரித்தி, ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடித்தது சங்கடமாக இருந்ததாகவும், இனி அதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.