கெனிஷா தன் வாழ்க்கையில் என்னவாக இருக்கிறார்?. பெற்றோர் முன் மனம் திறந்த ரவி மோகன்

கெனிஷா தன் வாழ்க்கையில் என்னவாக இருக்கிறார்?. பெற்றோர் முன் மனம் திறந்த ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் கிட்டத்தட்ட பல மாதங்களாக அவரையும் அவர் தோழி கெனிஷா பற்றியும் வெளியான வதந்திகளுக்கு இன்று பதிலளித்திருக்கிறார். ரவிமோகன் ஆர் எம் எஸ் என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுக்கிறார். இந்த ஸ்டுடியோ தொடக்க விழா இன்று நடைபெற்றது. அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் கெனிஷா மனம் திறந்து பேசி இருக்கிறார்.

கெனிஷா தன்னுடைய வாழ்க்கையில் தான் யார் என்பதை தனக்கு உணர வைத்திருக்கிறார். எனக்காக இவ்வளவு கூட்டம் வரும் என்பதை நான் இன்று தெரிந்து கொண்டேன். அதற்கு காரணம் கெனிஷா தான். அவர் எனக்கு கடவுள் தந்த பரிசு என சொல்லி இருக்கிறார்.

சினிமா மார்க்கெட்டுக்காக தன்னுடைய சொந்த வாழ்க்கையை பல நடிகர்கள் இன்று மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எத்தனை கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை என ரவி மோகன் அவருடைய தோழி கெனிஷாவை இந்த நிகழ்ச்சியில் முன்னிறுத்தி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

LATEST News

Trending News