மாதம்பட்டிக்கு செக் வைத்த ஆசை காதலி.. குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா?

மாதம்பட்டிக்கு செக் வைத்த ஆசை காதலி.. குக் வித் கோமாளியில் இருந்து விலகுகிறாரா?

மாதம்பட்டி ரங்கராஜனின் ஆசை காதலி ஜாய் கிரிஸல்டா அவருக்கு மிகப்பெரிய செக் வைத்து விட்டார். மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில் அவருடைய ஆடை வடிவமைப்பாளர் ஜாயை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

ஜாய் கிரிஸல்டா கோவிலில் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டதோடு கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸல்டா instagram பக்கத்தை பாலோ செய்வதை நீக்கி இருந்தார்.

மேலும் சமீபத்தில் நடந்த பொது விழா ஒன்றில் தன்னுடைய மனைவியுடன் கலந்து கொண்டார். மாதம்பட்டி இந்த இரண்டாவது திருமணத்தை பற்றி எந்த நிலைப்பாடில் இருக்கிறார் என்பதை தெரியாமல் எல்லோரும் குழம்பி போயிருந்தார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை காதலித்து கர்ப்பம் ஆக்கி ஏமாற்றி விட்டதாக ஜாய் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

ஏற்கனவே இவர்களுக்குள் பிரச்சனைகள் இருந்ததால்தான் ஜாய் இருவரும் கோவிலில் மாலை மாற்றிக் கொண்ட புகைப்படம் மற்றும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்ந்து இருக்கிறார்.

LATEST News

Trending News