புடிச்சவன் கூட போனா!! பேட் கேர்ள் பட இயக்குநர் விளக்கம்..
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குநரான வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் பேட் கேர்ள். இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி இப்படம் திரையில் ரிலீஸாகவுள்ளது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் வர்ஷா பரத் பேட்டியொன்றில் சில விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், படத்திற்கு அந்த தலைப்பு வைக்க காரணமே, யாரும் பேட் கேர்ள் இல்லை என்பதை குறிக்கத்தான்.
இந்த உலகத்தில் யாருமே பேட் கேர்ள் இல்லை, கெட்ட பெண் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. அது நாமாகவே வைத்துக்கொள்ளும் ஒரு லேபிள் தான்.
இந்த படத்தில் வரும் பெண் தனக்கு விரும்பிய ஒருவரோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறாள், அவள் எப்படி பேட் கேர்ள் ஆவாள் என்று தெரிவித்துள்ளார்.