கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த பிரபல பாலிவுட் நடிகை
பாலிவுட் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் இளம் நாயகியாக அறிமுகமானவர் தான் பரினீதி சோப்ரா.
ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் என்பதோடு மிகவும் பிரபலமானார். சில ஹிட் படங்கள் தான் இவரது திரை வாழ்க்கையில் உள்ளது என்று தான் கூற வேண்டும்.
இவர் கடந்த 2023ம் ஆண்டு ராகவ் சத்தா என்ற அரசியல் பிரபலத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் பரினீதி சோப்ரா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.