கவர்ன்மென்ட் சம்பளம் வாங்கிய தமன்னா.. அதுவும் கோடி கோடியா.. விபரம் இதோ!

கவர்ன்மென்ட் சம்பளம் வாங்கிய தமன்னா.. அதுவும் கோடி கோடியா.. விபரம் இதோ!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாக பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். இவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்றாலே கிளாமர் காட்சி கட்டாயம் இருக்கும் என ரசிகர்கள் முன் முடிவுக்கு வரும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். இவர் வேலை செய்து அரசாங்க சம்பளம் வாங்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் கோடி கோடியாக சம்பளம் வாங்கியுள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகை தமன்னா, வட இந்தியாவைச் சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு சினிமாவில் நன்கு அடித்தளம் அமைக்க இடம் கொடுத்தது தென்னிந்தியா தான். தொடக்கத்தில் ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த இவர், ஒரு கட்டத்தில் புது புது கதாநாயகிகளின் வரவால் கிளாமரிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதுவும் எடுத்த உடனே அதிரடியான கிளாமரில் களமிறங்கினால் ரசிகர்கள் ஷாக் ஆகி விடுவார்கள் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் களமிறங்கினார்.

பல முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்த இவர், நடிகர் கார்த்தியுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டார். தமிழில் இருந்து கொஞ்சம் விலகி தெலுங்கில் அதிக கவனம் செலுத்தினார். உலக அளவில் கவனம் ஈர்த்த தெலுங்கு படமான பாகுபலி படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது வெப் சீரீஸ்களிலும் நடித்து வருகிறார். சினிமாக்களை காட்டிலும் வெப் சீரீஸ்களில் அவர் அதிக கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சும் உள்ளது. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதலில் இருந்தார் என்று பேசப்பட்டது. அதன் பின்னர் சில வாரங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இவையெல்லாம் இப்படி இருக்க, கடந்த வாரத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதாவது தென்னிந்திய சினிமாவில் ஒரு இளம் நடிகர் தன்னிடம் படப்பிடிப்புத் தளத்தில் தவறாக நடக்க முயன்றார். நான் அதன் பின்னர் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. அவர் என்னிடம் மன்னிப்பு கேட்ட பின்னர்தான் படப்பிடிப்புக்குப் போனேன். அந்த நடிகர் இப்போது பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார் என்று கூறினார். தமன்னா இவ்வாறு கூறியதும், பலரும், அந்த நடிகராக இருப்பாரோ, இந்த நடிகராக இருப்பாரோ என சில தென்னிந்திய நடிகர்களின் பெயர்களை பட்டியலிடத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில் தமன்னா குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கர்நாடக மாநில அரசு தயாரிக்கும் குளியல் சோப் மைசூர் சாண்டல். இந்த சோப் உலகப் புகழ் பெற்ற சோப் என்று கூறலாம். இந்த சோப் விளம்பரத்தில் நடித்ததற்காக அவருக்கு கர்நாடக அரசு ரூபாய் 6 கோடியே 20 லட்சம் சம்பளமாக வழங்கி உள்ளது. இந்த தகவல் தற்போது வெளியே வர, பலரும் அவரைப் பார்த்து தமன்னா நடிகையாக வேலை பார்த்து அரசாங்க சம்பளம் வாங்கி விட்டாரே என்று பேசி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

LATEST News

Trending News