இனிமே கை நடுங்குது..கால் நடுங்குது சொல்லமுடியாது!! விஷாலின் தீவிர ஜிம் ஒர்க்கவுட்...
நடிகர் விஷால் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தன்னுடைய 48வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். ஏற்கனவே நடிகர் சங்க கட்டிடம் கட்டியப்பின் அங்கு தான் தன் திருமணம் என்று கூறியிருந்தார்.
இதன்பின், கை நடுக்கம், உடல்நிலையில் மோசம் என்று விமர்சனங்கள் விஷால் பக்கம் வந்தது. சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்வதாகவும் நடிகர் சங்க கட்டிடம் முடிந்ததும் கல்யாணம் 29 ஆம் தேதி முக்கிய தகவல் சொல்கிறேன் என்று விஷால் கூறியிருந்தார்.
தற்போது விஷால் உடற்பயிற்சி செய்து வரும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து பலருக்கு ஷாக் கொடுத்துள்ளார். இனிமேல் கை நடுங்குது, கால் நடுங்குதுன்னு சொல்லமுடியாது என்று நெட்டிசன்கள் விஷாலுக்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள்.