200 பவுன் நகை, கார் கொடுங்க கல்யாணம் பண்றேன்!! ஜோவிகா விஷயத்தின் கண்டீஷன் போட்ட வனிதா..
விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள் வனிதா, ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளையும் பெற்றெடுத்தார். அதன்பின் அவரை விவாகரத்து சொத்து பிரச்சனையை பெற்றோர்களிடம் போட்டு பிரிந்தார். ஒரு கட்டத்தில் மஞ்சுளா, வனிதாவை என் மகளே இல்லை என்று சொல்லி வீட்டைவிட்டு அனுப்பி வைத்தார்.
பின் வனிதா, ஆனண்ட் என்பவரை திருமணம் செய்து ஜெயினிதா என்ற மகளை பெற்று கணவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டார். பின் தனியாக வாழ்ந்து வந்த வனிதா, பல சர்ச்சைகளில் சிக்கி பின் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அதன்பின் மகள் ஜோவிகா வளர்ந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து பிரபலப்படுத்தினார். வனிதா, ராபர்ட் மாஸ்டரை வைத்து மிஸ்சஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்தார் ஜோவிகா
இந்நிலையில், வனிதா தனது பொண்ணை கெடுக்கிறார் என்று அந்த பெண்ணின் வாழ்க்கையும் வனிதாவின் வாழ்க்கை போல ஆகிவிடும் என்று பலர் விமர்சித்து வந்தனர்.
அதற்கு பதிலடிகொடுக்கும் விதமான, சமீபத்தில் வனிதா அளித்த பேட்டியொன்றில், என் பொண்ணு மீது உங்களுக்கு இருக்கும் அக்கறைக்கு நன்றி, நான் ஜோவிகாவிற்கு திருமணம் செய்து வைத்துவிடுகிறேன். ஆனால் ஒரு இன்னோவா கார் மற்றும் 200 பவுன் நகையும் வாங்கி தந்துவிடுங்கள் என்று சிரிப்புடன் கூறி பதிலடி கொடுத்துள்ளார் வனிதா.