'எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது'.. ஓபனாக பேசிய தனுஷ் பட நடிகை
தனுஷ் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாத்தி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சம்யுக்தா. இவர் தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார்.
குறிப்பாக மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சம்யுக்தா மேனன், தற்போது ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பென்ஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அகண்டா 2, ராம் உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில், நடிகை சம்யுக்தா அளித்த பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த பேட்டியில் "எனக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. தினமும் மது அருந்துவது இல்லை. மனா அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும்போது மட்டும்தான் குடிப்பேன்" என சம்யுக்தா கூறியுள்ளார்.