58 வயது நடிகருக்கு அம்மாவா ரோலில் நடிக்க மறுத்த 38 வயது நடிகை!! சிக்க வைத்த இயக்குநர்..
சூப்பர் ஸ்டார் நடிகர்கள் எத்தனை வயதானாலும் உச்ச நட்சத்திரம் என்ற பிம்பத்தில் இருந்து விலகுவதில்லை. நாயகிகளை பொறுத்தவரை வாய்ப்பு குறைந்தாலும் குறிப்பிட்ட வயதானப்பின் அம்மா ரோல் தான் கிடைக்கும். அந்தவகையில், 60 வயதை எட்டிய நெருங்கியுள்ள ஒரு நடிகை 40 வயதில் அம்மா ரோலில் நடித்தார். அந்த படம் ரூ. 1200 கோடிக்கும் அதிகமான வசூலை தாண்டியது.
அந்த நடிகை தான் ஷாருக்கானின் ஜவான் படத்தில் அவருக்கு தாயாக நடித்த நடிகை ரித்தி டோக்ரா தான் அவர். காவேரி ரோலில் நடித்த நடிகை ரித்தி டோக்ராவிற்கு 38 வயது, ஷாருக்கானுக்கு 58 வயது. ஆரம்பத்தில் அட்லீ அப்படத்தில் அம்மா ரோலில் நடிக்க கேட்டபோது மறுத்துள்ளார் ரித்தி.
பின் ஒரு வழியாக சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார். ஷாருக்கான் இளமையாக இருந்தார், அவருக்கு நான் தாயாக நடித்தது அபத்தமாக இருந்தது. ஜவான் ஷூட்டிங்கின் போது அட்லீயை சந்திக்க எனக்கு அழைப்பு வந்ததும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
ஆனால், என்ன மாதிரியான ரோல் என்று எதைப்பற்றியும் தெரியாமல் சென்றபோது என்னுடைய ரோல் குறித்து விரிவாக சொன்னதும் நான் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டேன். பின் தீபிகா படுகோன் தான் அம்மா, நான் அந்த இளம் வயது ஷாருக்கானின் பாதுகாவலர். தீபிகாவை அம்மாவா அழைக்க அவர்கள் தயாராக இல்லை என நினைக்கிறேன்.
அதனால் என்னை நடிக்க வைக்க கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு இந்த வாய்ப்பை தவறவிட தோன்றவில்லை. அதனால், நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் ஷாருக்கானின் மிகப்பெரிய ரசிகை. அவர் படத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பேன் என நினைக்கவில்லை.
இதிலிருந்து மீண்டு, இந்த நினைவுகளை அழிக்க, மீண்டும் ஒரு படத்தில் ஷாருக்கானுடன் நடித்தாகவேண்டும் என்று ரித்தி குறிப்பிட்டுள்ளார்.