விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு ! சண்டையிட்டரா நடிகர் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறு ! சண்டையிட்டரா நடிகர் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக உள்ளவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

மேலும் தளபதி விஜய்யுடன் இவர் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டானது, அப்படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

அதுமட்டுமின்றி இவர் நடிப்பில் லாபம், துக்லக் தர்பார், யாதும் ஒரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளது.

இந்நிலையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்துக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது படக்குழுவினரில் சிலருக்கும் அங்கு சென்ற பத்திரிகையாளருக்கும் இடையே வாக்குவாதம் பின்பு பெரிய தகராறாக மாறியுள்ளது. இதனால் படப்பிடிப்பு சற்று நேரம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சக பத்திரிகையாளர்களுக்கும் படக்குழுவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் நடிகர் விஜய்சேதுபதி அங்கு வந்து இரு தரப்பினரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டிருந்தபோது தடுத்து சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார்.

அதன் பிறகு காவல்துறையினரின் கவனத்துக்கு இந்த பிரச்சனை சென்றதை அடுத்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

LATEST News

Trending News

HOT GALLERIES