ரூ. 39 லட்ச மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்!! மோசடி வழக்கில் வசூல் ராஜா பட நடிகர்
வசூல் ராஜா MBBS படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர் தான் மலையாள நடிகர் ஜெயசூர்யா. மிமிக்ரி கலைஞராக வாழ்க்கையை தொடங்கியவர், 100க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கினார். சேவ் பாக்ஸ் எனும் முதலீட்டுச் செயலில், விளம்பர தூதராக நடித்ததன் மூலம் பல சர்ச்சைகளில் ஜெயசூர்யா சிக்கி, சின்னா பின்னமாகியுள்ளார்.

ஏலங்கள் மூலம் குறைந்த விலையில் கேஜெட்டுகள் உள்ளிட்ட மின்னணி சாதனங்களை வாங்கும் வசதிக்காக, அந்த ஆப் தொடங்கப்பட்டது. ஏலத்தில் பங்கேற்க, சேவ் பாக்ஸ் வழங்கும் மெய்நிகர் காயின்களை வாங்க, பணம் செலுத்த வேண்டும். அப்படி விற்கப்படும் காயின்களை பயன்படுத்தி ஏலம் நடத்தப்படும். இந்தியாவின் முதல் பந்தய செயலியாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த அப்பை, நடிகர் ஜெயசூர்யாதான் திறந்து வைத்துள்ளார்.
இந்நிலையில், சேவ் பாக்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையை விற்பதாக கூறி அந்த நிறுவன உரிமையாளர் சாதிக், லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பலரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு டீலில் விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட பலரும் திருச்சூர் காவல்நிலையத்தில் புகாரளிக்க சேவ் பாக்ஸ் ஆப்பின் உரிமையாளர் சாதிக்கை போலிசார் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மோசடியில் நடிகர் ஜெயசூர்யாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட செயலியின் நிறுவனத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதும், அதில் நடிகருக்கும் அவரது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறபடுகிறது. செயலியின் விளம்பளத்திற்கு மட்டும் ஜெயசூர்யா சுமார் ரூ. 1 கோடி ரொக்கமாக பெற்றுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வளவு பெரிய தொகை கைமாறியது உண்மையா? இல்லை கருப்பு பணத்தை கணக்கு காட்ட போலி ஆவணங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதற்கிடியில் வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க தொடங்கியதில், நடிகர் ஜெயசூர்யாவிற்கும் அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பி, ஏற்கனவே இருமுறை விசாரணை மேற்கொள்ளப்பட்டதுள்ளது.
பெரியளவிலான நிதி பரிவர்த்தனைகள் நடந்ததாக முக்கிய ஆவணங்களும் சில சிக்கியதாகவும் 75 லட்சத்திற்கு மட்டுமே முறையான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாவும் டாக்குமெண்ட் உள்ளது. மீதமுள்ள பல லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு என்பதில் விசாரணைக்கு பின் தான் தெரியவரும்.. நடிகர் ஜெயசூர்யாவின் ரூ. 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர். அவற்றிற்கு உரிய ஆவங்கள் சமர்பித்து தன் மீது குற்றம் இல்லை என்று ஜெயசூர்யா நிரூபித்தால் சொத்துக்கள் மீண்டும் விடுவிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.