மீண்டும் முதல் மனைவியுடன் மாதம்பட்டி ரங்கராஜ்.. அப்போ.. கர்ப்பமான 2வது மனைவியின் நிலை..? கோவையில் கூத்து..
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் திரைப்படங்களில் நடிகராகவும் சமையல் கலைஞராகவும் பிரபலங்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கு சமையல் காண்ட்ராக்டர் ஆகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் என பல தளங்களில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய ஒரு நபர்.
சமீபத்தில் இவருடைய தனிப்பட்ட இமேஜ் பொதுமக்கள் மத்தியில் ஏகத்துக்கும் அடி வாங்கியது. இதற்கு காரணம் இவருடைய இரண்டாவது திருமணம் தான்.
இவருடைய ஆடை வடிவமைப்பாளராக வேலைக்கு சேர்ந்த ஜாய் கிரிஸில்டா என்பவர் நட்பாகி அந்த நட்பு ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருவருக்கும் இடையே ஒரு கருவும் உண்டாகி இருக்கிறது.
அந்த கருவிற்கு தற்போது ஏழு மாதம் ஆகிறது. இந்நிலையில், கடந்த மாதம் மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடைய கணவர்.
அவருடைய வாரிசை என் வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறேன் என்று ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தது அதிர்வலைகளை கிளப்பியது.
மட்டுமில்லாமல் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு அதிர வைத்திருந்தார் ஜாய் கிரிஸில்டா. இந்நிலையில், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாதம்பட்டி தங்கராஜ் தன்னுடைய முதல் மனைவியுடன் வந்திருந்தது பேசுபொருள் ஆகி இருக்கிறது.
இது என்ன கூத்தா இருக்கு..? ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளா..? அல்லது முதல் மனைவிக்கு தெரிந்தே இரண்டாவது திருமணம் நடந்ததா..? அல்லது இரண்டாவது திருமணம் போலியானதா..? அல்லது இரண்டாவது மனைவிக்கு செட்டில்மெண்ட் செய்து பிரச்சினையை முடித்து விட்டாரா..? அல்லது சென்னைக்கு ஒன்னு.. கோவைக்கு ஒன்னுன்னு வாழ ஆரம்பிச்சுட்டாரா..? என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு விமர்சனங்களை இணைய வாசிகள் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் இணைய பக்கத்தில் பூதாகரமாக வெடித்திருக்கிறது. பிரபலமாக இருக்கும் நபர்கள் சமூகத்திற்கு என்ன விதமாக தோற்றத்தை கொடுக்கிறார்கள். ரெண்டு கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா சுத்திகிட்டு இருக்காங்க.. நாம பண்ணா என்ன.. என யாரேனும் ஒருவர் நினைத்தாலும்.. அங்கே ஒரு குடும்பம் சிதையும் வாய்ப்பு உள்ளது.. என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை என புலம்பும் இணைய வாசிகள் ஒரு பக்கம் இருக்க.. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் விவாதிக்க அவசியம் இல்லை என்று கூறும் நபர்களும் இருக்கிறார்கள்.