பொதுவெளியில் அப்படி செய்தால் எனக்கு பெரிய சங்கடமாக இருக்கும், டிடி கோபம்
சின்னத்திரை தொகுப்பாளனிகளில் எப்போதும் டாப்-ல் இருப்பது டிடி. இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவரை பார்த்து பல பெண்கள் தொகுப்பாளனி ஆகவேண்டும் என்று ஆசையாக வந்து வெற்றியும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் டிடி-க்கு காலில் ஏற்பட்ட ஒரு விபத்தால் சில வருடங்களாக பல நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கும் வாய்ப்புக்களை மறுத்து வந்தார்.
இந்நிலையில் டிடி தற்போது ஒரு பேட்டியில் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், எனக்கு பிடிக்காத தர்மசங்கடமாக இருக்கும் விஷயம் என்றால், பொதுவெளியில் நான் செல்லும் போது சிலர் என் காலில் வந்து விழுவார்கள் அது எனக்கு பெரிய தர்ம சங்கடத்தை உருவாக்கும், அதை என்னால் ஏத்துக்கவே முடியாது என டிடி கூறியுள்ளார்.