அரச குடும்பம்..லீக் வீடியோவால் பறிபோன சினிமா வாழ்கை!! சர்ச்சைகளை சமாளித்த நடிகை..
சினிமாவில் அறிமுகமாகி நடித்துக்கொண்டிருக்கும் போது சில நடிகைகளை பற்றிய சர்ச்சைகளால் அவர்களின் கரியரே அழிந்துபோகும். அப்படி ஒரு நடிகையின் லீக் வீடியோவால் தனக்கென தனியிடம் பிடிக்க முடியாமல் போயுள்ளது.
அந்த நடிகை வேறுயாருமில்லை, 1999ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகிய ரியா சென் தான். 19 வயதில் அப்படத்தின் மூலம் அறிமுகமாகிய ரியா சென்னுக்கு தற்போது 44 வயது.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் அறிமுகமாகினாலும் அவரால் பெரியளவில் வெற்றியை பெறமுடியவில்லை. ஆனாலும் தற்போது நடித்து வருகிறார். திரிபுராவை சேர்ந்த ரியா சென்னி தந்தை பாரத் தேவ் வர்மா அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்தது.
அப்னா சப்னா மனி மனி படத்திற்கு பின் அடுத்தடுத்த 12 தோல்வி படங்களில் நடித்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்த ரியா சென், இன்று வரை அதிலிருந்து விடுபடவில்லை. 2016ல் டார்க் சாக்லெட் படத்தில் நடித்தும் வெப் சீரிஸில் நடித்தும் வருகிறார். 2005ல் நடிகர் அஷ்மித் படேல் என்பவரை காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவரின் எம் எம் எஸ் வீடியோ ஒன்று வெளியாகி திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ரியா சென் மற்றும் அஷ்மித் படேல் இருவரும் அந்த வீடியோ பொய்யானது என்று மறுத்தனர். அதன்பின் தான் ரியா சென்னுக்கு வாய்ப்புகள் குறையத் துவங்கியது. சினிமா வாழ்க்கையிலும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி பல்வேறு சர்ச்சைகளால் மன உளைச்சலுக்கு ஆளானார் ரியா சென்.
மேலும் நடிகர் ஜான் ஆபிரகாமும் ரியாவும் டேட்டிங் செய்ததாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறப்பட்டது.
இதுதவிர எழுத்தாளர் சல்மான் ருஷ்டியுடன் ரியாவின் பெயரும் இணையப்பட்டதாக பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்திகளை ரியா மறுத்தார்.
மேலும் கிரிக்கெட் வீர்ர்களான யுவராஜ் சிங் மற்றும் ஸ்ரீகாந்துடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இறுதியாக 2017ல் தனியார் பெங்காலி விழாவில் தன் காதலன் சிவம் திவாரியை மணந்தார்.