மோனிகா பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே இத்தனை கோடி சம்பளம் வாங்கியுள்ளாரா!!
இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. பிசியாக பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது சிறப்பு பாடலுக்கும் நடனமாடி வருகிறார்.
அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தில் வரும் மோனிகா என்கிற பாடலில் பூஜா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்த பாடல் உலகளவில் செம ரீச் ஆகிவிட்டது.
பல மில்லியன் பார்வையாளர்களை Youtube-ல் பெற்றுள்ள இந்த மோனிகா பாடலில் நடனமாட நடிகை பூஜா ஹெக்டே எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பாடலில் நடனமாட ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை பூஜா சம்பளம் வாங்கியுள்ளார் என கூறுகின்றனர்.
மேலும் இவர் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ரூ. 5 கோடி முதல் ரூ. 6 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.